1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. what is the story on palani murugan koil land

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

murugan koil
பழனி அடிவாரத்தில் தண்டபாணி சுவாமி மரத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் 100 கோடி மதிப்புடையது. இந்த நிலத்தை கோயில் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. கடந்த வருடம் அந்த இடம் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது.

இந்தநிலையில்தான் கடந்த 6ம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 கோடிக்கு அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பவே சார் பதிவாளர், விழுப்புரத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அந்த நிலத்தை தனியாருக்கு பத்திர பதிவு செய்தது செல்லாது என மதுரை நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது..

இந்நிலையில்தான், பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி என்பதை தெரிவிக்கும் விதமாக அதன் பத்திரம் வெளியாகியிருக்கிறது. 

100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி தர்ம காரியங்கள் செய்வது வழக்கம் எனவும், எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தினால் விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், 100 கோடி மதிப்புடைய நிலம் 2 கோடிக்கு விற்கப்படுவதே அதிக விலை என அதில் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் 27ஆம் தேதி கையெழுத்தான விற்பனை பத்திரம் ஜூன் 6-ம் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!