1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. five year prision to living to gether married persons

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

living together
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருவது (லிவ்விங் டூ கெதர்) வெளிநாட்டில் மிகவும் சகஜம். ஆனால் கடந்த பல வருடங்களில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பழக்கம் அதிகரித்திருக்கிறது.

ஏனெனில் திருமணம் செய்து கொண்டு மனக்கசப்பு ஏற்பட்டு பின் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகளை மிதிப்பதை விட லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து பிடிக்கவில்லை என்றால் குட் பை சொல்லிக்கொண்டு பிரிந்து விடலாம் என்பதே தற்போது பல படித்த இளம் பெண்களின் மனநிலையாக இருக்கிறது.

ஆனால் கலாச்சாரத்தை கட்டி காப்பவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.. இந்தியாவில் அது கலாச்சாரத்திற்கு எதிரானது என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது..

அதேபோல் திருமணமான ஒருவரும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வரும் பழக்கமும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான்,
திருமணமான ஒருவர் வேறு ஒருவருடன் லிவ்விங் டூ கெதர் உறவில் இருந்தால் அதிகபட்சமாக ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்க பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேநேரம் விவாகரத்தை பொருத்தவரை நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ தீர்ப்பு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னையில் கள்ளநோட்டு கும்பல் 3 பேர் கைது.. சர்வதேச கும்பலுடன் தொடர்பா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்...