1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. people has to stay in home for selling it

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

ghost house
ஜப்பான் நாட்டில் பல வீடுகள் குறிப்பாக கிராமப்புறங்களில் கட்டப்படும் பல வீடுகள் யாரும் குடியிருக்காமல் அப்படியே கைவிடப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் தாய் தந்தை இறந்ததும் அவர்களின் மகன்கள் வேலை வாய்ப்புக்காகவும், தொழிலுக்காகவும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள்.

ஒருபக்கம் ஜப்பானில் வயதானவர்கள் அதிக வருடங்கள் தனியாகவே வீட்டில் வசிக்கிறார்கள்.. அவர்கள் இறப்புக்கு பின்னரும் பல வீடுகள் கைவிடப்படுகிறது.. அப்படிப்பட்ட வீடுகளில் பேய்கள் வசிப்பதாகவும் ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஒருபக்கம், ஜப்பானில் ஒரு வீடு வாடகைக்கு விடுவதோ அல்லது விற்பதோ சுலபமில்லை.. அங்கே நிறைய விதிமுறைககளை பின்பற்றவேண்டும். மேலும், அதிக வரி செலுத்த வேண்டும். இதனாலே பலரும் வீட்டை அப்படியே விட்டுவிடுகிறார்கள்..

இந்நிலையில்தான், ஜப்பானில் வீடுகளை விற்பதற்கு வீட்டின் சொந்தக்காரர்கள் ஒரு புதிய ஐடியாவை கண்டுபிடித்துள்ளனர். வீட்டில்  தனியாக இருப்பவர்கள் இறப்பது, தீ விபத்து, தற்கொலை செய்து கொள்வது போன்ற காரணங்களால் பல வருடங்களாக யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். அப்படி தங்கவைத்தால் அந்த வீட்டை வாங்க முன்வருவார்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..