தொடர்புடைய செய்திகள்
- விஜயை பார்க்க கேரளாவிலிருந்து நடந்தே வந்த தம்பதி!.. சந்திப்பாரா முதல்வர்?..
- மாறுவேடத்தில ரவுண்ட்ஸ் போறார் விஜய்!.. கெத்தா சொல்லி ட்ரோல் ஆயிடுச்சே!...
- வாங்குன பணத்தை திருப்பி கொடுங்க!.. ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட ஆர்டர்!..
- விஜயை சந்தித்து சர்ப்பரைஸ் பண்ணிய பார்த்திபன்!.. வைரல் போட்டோ..
- அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட ர்நாடக இசை வீணை கலைஞர் வீணா காயத்ரி.. இதுதாண்டா மாற்றம்...!
விஜயா?.. அண்ணாமலையா?.. எந்த பக்கம் போகப்போகிறார் ராகவா லாரன்ஸ்?...
ரஜினியின் தீவிர ரசிகர் ராகவ லாரன்ஸ். அதேநேரம் நடிகர் மற்றும் முதல்வர் விஜய்க்கும் நண்பராக இருப்பவர். திருமலை படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருப்பார். சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது விஜயி பாராட்டி பதிவுகளையும் போடுவார்..
விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகிவிட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்த கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸை அவர் நிறுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் சேவை தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வருகிற 11ம் தேதி அறிவிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். அதில், #mattram #Serviceisgod என்கிற ஹேஷ்டேக்குகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
ஒருபக்கம் பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை ஒரு புதிய இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார். அவர் ரஜினியை முன்னிறுத்தி இந்த இயக்கத்தை தொடங்கியிருக்கும் நிலையில் ராகவா லாரன்ஸ் அந்த இயக்கத்தில் இணையவே அதிக வாய்ப்பிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
எனவே ராகவா லாரன்ஸ் விஜயின் தவெகவில் இணைவாரா அல்லது அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவாரா என்பது வருகிற 11ம் தேதி தெரிந்துவிடும். சிலரோ, ராகவா லாரன்ஸ் புதிய இயக்கத்தை துவங்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் சொல்லி வருகிறார்கள்.
