1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vijay asked produer to retrun the advacne money

வாங்குன பணத்தை திருப்பி கொடுங்க!.. ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட ஆர்டர்!..

jananayagan
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், மமிதா பேனர்ஜி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இந்த படம் வெளியாகவிருந்தது. இந்த படத்தை பார்க்க விஜய ரசிகர்களின் மிகவும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்பட்டது.
 
ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. எனவே தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே வழக்கை வாபஸ் வாங்கிய தயாரிப்பாளர் மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை படத்திற்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
 
விஜய் தமிழக முதலமைச்சராகிவிட்டதால் கண்டிப்பாக படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. ஒருபக்கம் இந்த படத்தை தயாரிக்கும் கே.வி.என் நிறுவனம் மற்ற படங்களை தயாரிப்பதிலும் வெளியிடுவதிலும் பிஸியாக இருக்கிறது. எனவே ஜனநாயகன் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 
 
இந்நிலையில், விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு படத்தின் தயாரிப்பாளரிடம்  விஜய் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, ஜனநாயகம் ரிலீஸ் மேலும் தாமதமாகும் என கணிக்கப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரின் புதிய படம் பாலன்!.. வெளியான டிரெய்லர் வீடியோ!..