1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Carnatic Veena Exponent Veena Gayathri Visits Amma Unavagam as CM Vijay Successfully Revives the Scheme Across Tamil Nadu

அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட ர்நாடக இசை வீணை கலைஞர் வீணா காயத்ரி.. இதுதாண்டா மாற்றம்...!

முதலமைச்சர் விஜய்
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞர் வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள "அம்மா உணவகத்திற்கு" நேரில் சென்று உணவு அருந்தி, தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொண்டுள்ளார். அங்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மற்றும் தூய்மையை பாராட்டிய அவர், ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் இந்த உன்னத திட்டம் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த சில காலங்களாக போதிய பராமரிப்பின்றி நலிவடைந்து வந்த அம்மா உணவகம் திட்டத்தை, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசு தமிழகம் முழுவதும் மிக வெற்றிகரமாக மீட்டெடுத்து, புத்துயிர் ஊட்டியுள்ளது. ஏழை எளிய மக்கள், அடித்தட்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடுகளை சீரமைத்து, உணவகங்களை முதலமைச்சர் விஜய் நவீனப்படுத்தியுள்ளார்.
 
அரசியல் கடந்து, கலை உலகை சேர்ந்த வீணா காயத்ரி போன்ற ஆளுமைகள் அம்மா உணவகத்திற்கு சென்று பாராட்டு தெரிவிப்பது, இந்த திட்டத்தின் மக்கள் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. 
 
முதலமைச்சரின் இந்த அதிரடி மற்றும் மக்கள் நல நடவடிக்கை, அடித்தட்டு மக்களின் பசிப்பிணியை போக்குவதில் தற்போதைய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை காட்டுவதுடன், பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
சூலூர் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு.. கைதான இருவரும் கை, கால்களில் மாவுக்கட்டு, நடக்க முடியாததால் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்த போலீசார்