தொடர்புடைய செய்திகள்
- மாறுவேடத்தில ரவுண்ட்ஸ் போறார் விஜய்!.. கெத்தா சொல்லி ட்ரோல் ஆயிடுச்சே!...
- வாங்குன பணத்தை திருப்பி கொடுங்க!.. ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட ஆர்டர்!..
- விஜயை சந்தித்து சர்ப்பரைஸ் பண்ணிய பார்த்திபன்!.. வைரல் போட்டோ..
- அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட ர்நாடக இசை வீணை கலைஞர் வீணா காயத்ரி.. இதுதாண்டா மாற்றம்...!
- அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..
விஜயை பார்க்க கேரளாவிலிருந்து நடந்தே வந்த தம்பதி!.. சந்திப்பாரா முதல்வர்?..
விஜய்க்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜயின் புதிய திரைப்படங்கள் கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூலையும் பெற்றது. இதை கேரள நடிகர் பிரித்திவிராஜ் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.
தற்போது விஜய் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக மாறியிருக்கிறார். மேலும், இனிமேல் அவர் சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனவும் அறிவித்துவிட்டார். இந்நிலையில், விஜயை பார்ப்பதற்காக ஒரு தம்பதி கேரளாவில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்திருக்கும் சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கேரள மாநிலம் மணப்பூர் பகுதியில் வசித்து வரும் ரஃபி - சஹானா தம்பதி சிறு வயதிலிருந்தே விஜயின் ரசிகர்களாக இருந்திருக்கிறர்கல். விஜயை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்பது இவர்களின் ஆசையாக இருந்திருக்கிறது.
தற்போது விஜய் முதலமைச்சராகிவிட்ட நிலையில் கேரளாவிலிருந்து அவரை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து நடந்தே செல்ல முடிவெடுத்தனர். சுமார் 500 கிலோ மீட்டரை 32 நாட்களாக கடந்தவர்கள் இன்று சென்னைக்கு அருகே உள்ள மதுராந்தகத்தை தாண்டி விட்டனர். அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் அவர்கள் முதல்வர் விஜயை சந்திக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
