தொடர்புடைய செய்திகள்
- கட்சி நிதி பேரில் வருடத்திற்கு 1200 கோடி!.. டாஸ்மாக்கில் நடந்த கொள்ளை!..
- மதுபானங்கள் வழங்கும் ஆலைகளுக்கு கூடுதல் வரி.. ரூ.1000 கோடி தமிழக அரசுக்கு வருமானம்..!
- விஜய் பிரெஸ்ஸ மீட் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கா?!.. கோபப்பட்ட சிடி நிர்மல்குமார்!..
- செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்!.. விரைவில் கைது?.. அதிரடி காட்டும் விஜய்!..
- ஆதரவு கவுண்ட் கூடிக்கிட்டே போகுதே!.. உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை!...
மாறுவேடத்தில ரவுண்ட்ஸ் போறார் விஜய்!.. கெத்தா சொல்லி ட்ரோல் ஆயிடுச்சே!...
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 60 வருடங்களுக்குப் பின் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
நடிகராக இருந்த விஜய் அரசியல் கட்சியை தொடங்கி தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். கடந்த மாதம் 10ம் தேதி விஜய் முதலமைச்சரக பொறுப்பேற்றார். புதிய அரசை பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் ஆறு மாதங்கள் இந்த ஆட்சியை விமர்சிக்க மாட்டோம் என சொன்ன திமுக சில நாட்களிலேயே இந்த அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கி விட்டது. குறிப்பாக சட்ட ஒழுங்கு சீர் கெட்டுப் போயிருப்பதாக அந்த கட்சியை குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில்தான், தவெக முக்கிய நிர்வாகி ஆனந்த்ஜித் கூறியுள்ள கருத்து ட்ரோலில் சிக்கியிருக்கிறது. விஜய் ஏன் அவரின் தொகுதி பக்கம் செல்வதில்லை? என ஊடகம் ஒன்றில் அவரிடம் கேட்ட போது முதல்வர் விஜய் பெரம்பூருக்கு போகலைன்னு நீங்க எல்லாரும் நினைச்சுக்கிட்டா நாங்க என்ன பண்றது?.. விஜய் மாறுவேடத்தில் எல்லா இடத்துக்கும் போயிட்டு இருக்காரு.. பல இடங்களுக்கு அவர் சத்தம் இல்லாம போயிட்டு இருக்காரு..
எங்க ரோடு சரியில்ல.. எங்க என்ன பிரச்சனை நடக்குதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும் என அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து இது முதல்வன் படத்தில் ஏற்கனவே வந்துடுச்சி.. அந்த படத்துல இத அர்ஜுன் செஞ்சிருப்பார்.. என குறிப்பிட்டு அந்த படத்தில் காட்சிகளை ஸ்கிரீன்ஷாட்டை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
