தொடர்புடைய செய்திகள்
- அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட ர்நாடக இசை வீணை கலைஞர் வீணா காயத்ரி.. இதுதாண்டா மாற்றம்...!
- அம்மா உணவகங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தத்தெடுக்கலாம்.. ஸ்டார் ஓட்டல் மாதிரி மாற்றலாம்.. முதல்வர் விஜய்க்கு ஐடியா கொடுக்கும் நெட்டிசன்கள்...
- ‘கருப்பு’ படத்தில் விஜய் நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும்: எடிட்டர் கலைவாணன்..
- அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..
- கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..
விஜயை சந்தித்து சர்ப்பரைஸ் பண்ணிய பார்த்திபன்!.. வைரல் போட்டோ..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின் திரையுலகிலிருந்து ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.
எனவே திரையுலகனர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவர்கள் பல கோரிக்கைகளையும் முதல்வர் விஜயிடம் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட புதிய திரைப்படங்கள் வெளியானால் ஒரு வாரத்திற்கு 5 சிறப்பு காட்சிகளை திரையிட்டுக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
ஒருபக்கம் திரையுலகை சேர்ந்த பலரும் முதல்வர விஜயை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நேற்று கூட கருப்பு பட இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது மனைவியுடன் சென்று முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார்..
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் தமிழக முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். அப்போது விஜயை மன்னன் போல அலங்கரிக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் விஜய்க்கு பரிசளித்தார். அதோடு புகைப்படத்தில் கீழ்க்கண்டவாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.
