புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2026 (22:05 IST)

சென்னை வரும் மோடி!.. சிவப்பு மண்டலமாக மாறிய சென்னை!.. பரபர அப்டேட்!..

சென்னை வரும் மோடி!.. சிவப்பு மண்டலமாக மாறிய சென்னை!.. பரபர அப்டேட்!..
தேர்தல் வரும்போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெறவிருக்கிறது.இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இதைத் தொடர்ந்து சென்னைக்கு பிரதமர் மோடி வரும் நாளன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக மீனம்பாக்கம், கிண்டி ஆகிய இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது அந்த பகுதிகளில் ட்ரோன்கள், ஆளில்லாத வான்வழி கருவிகள், ட்ரோன்களில் பறக்க விடப்படும் கேமராக்கள், ஏர் பலூன்கள் ஆகியவவை பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, டிடிவி தினகரன், பிரேமலதா, ஜிகே வாசன், பாரி வேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள் எனத்தெரிகிறது.