திங்கள், 9 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஜனவரி 2026 (15:54 IST)

உலகமே மோடியை பாஸ் என்கிறது.. ஆனால் இன்று மோடி 45 வயது நபரை ‘பாஸ்’ என்றார்.. யார் அவர்?

உலகமே மோடியை பாஸ் என்கிறது.. ஆனால் இன்று மோடி 45 வயது நபரை ‘பாஸ்’ என்றார்.. யார் அவர்?
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக 45 வயதான நிதின் நபின் முறைப்படி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற 'சங்கதன் பர்வ்' தேர்தல் நிறைவில், அவர் ஒருமனதாக தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய தலைவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். 45 வயதான நிதின் நபினை "மில்லினியல்" தலைமுறை தலைவர் என்று வர்ணித்த பிரதமர், இந்தியாவின் மிகப்பெரிய மாற்றங்களை கண்ட தலைமுறையை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று பாராட்டினார்.
 
கட்சி விவகாரங்களை பொறுத்தவரை நிதின் நபின் தான் இனி தனது 'பாஸ்' என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "கட்சி விஷயங்களில் நான் ஒரு சாதாரணத் தொண்டன், நிதின் நபின் ஜி தான் எனக்கு பாஸ். அவர் பாஜகவை வழிநடத்துவது மட்டுமல்லாமல், என்.டி.ஏ கூட்டணியின் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளார்" என்று பிரதமர் கூறினார். 
 
Edited by Siva