தமிழகத்தில் இன்று முதல் மூன்று புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. பிரதமர் தொடங்கி வைப்பு..!
தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில்கள் தமிழகத்தை மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி மற்றும் திருச்சிராப்பள்ளி - நியூ ஜல்பைகுரி ஆகிய மூன்று முக்கிய வழித்தடங்களில் இந்த அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சாதாரண மக்களும் எளிய கட்டணத்தில் நவீன வசதிகளுடன் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், சிறந்த உட்புற வடிவமைப்பு மற்றும் அதிவேகப் பயணம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
தமிழகத்திலிருந்து கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பிற்காக பிற மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு இந்த ரயில் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
Edited by Siva