1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nanjil sampath explain about he quit tvk

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

nanjil sampath
மதிமுகவில் முக்கிய பேச்சாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அழகிய தமிழ், அடுக்குமொழியில் அழகாய் பேசி கைத்தட்டலை வாங்குபவர் இவர். எல்.கே.ஜி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இணைந்தார்.

அப்போது அதிமுக இவருக்கு ஒரு காரையும் பரிசாக கொடுத்தது. சில தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அவரின் மறைவுக்கு பின் சில வருடங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெக பரப்புரை செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. நிறைய தவெக மேடைகளிலும் பேசினார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் ‘போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை எவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது’ என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, நாஞ்சில் சம்பத் தவெக தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதோடு நடிகர் தனுஷின் அமைப்பில் நாஞ்சில் சம்பத் இணைந்தது போன்ற ஒரு புகைப்படமும் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள நாஞ்சில் சம்பத் ‘அதுபோல முட்டாள்தனத்தை நான் செய்ய மாட்டேன். தவெகவில்தான் நான் இன்னமும் நீடிக்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் இன்று அதிபர் தேர்தல்.. 12.5 கோடி மக்கள் வாக்களித்தனர்.. டிரம்ப் பதிவால் பரபரப்பு..