சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். எனவே பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் தமிழகத்தின் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னைக்கு வரவிருக்கிறார்கள். இந்த விழாவில் முதலமைச்சர் விஜயும் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி காரில் சென்னை ஐஐடிக்கு செல்கிறார். அப்போது வழிநெடுக அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி செல்லும் வழியில் அவர் மக்களை பார்த்து கையசைப்பார் என தெரிகிறது. பிரதமர் மோடியின் ரோட் ஷோவை வடிவமைக்கும் பணியில் தமிழக பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.