1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ponraj said he wont ask apologies

விஜய்க்கு பொண்டாட்டியா இருப்போம்!.. விபச்சாரிகளை அப்டிதான் சொல்ல முடியும்.. மன்னிப்பு கேட்க மறுக்கும் பொன்ராஜ்..

pon raj
தவெக தலைவர் விஜய் பிரபலமான சினிமா நடிகர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் உள்ளனர். விஜய் கரூர் சம்பவத்தில் சிக்கிய போதும், விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு போன போதும், விஜய் திரிஷாவை கூட்டிக்கொண்டு திருமணத்திற்கு போன போதும் விஜயின் தீவிர ரசிகர்கள் பலரும் அவருக்கு முட்டுக் கொடுத்தனர்..

அதிலும் ஒரு பெண் ‘விஜய்க்கு தங்கையாக இருக்கோம்.. அக்காவாக இருக்கோம்.. தேவைப்பட்டால் அவருக்கு பொண்டாட்டியாக கூட இருப்போம்’ என்று பேசினார். அதேபோல் ‘என் புருஷனை விடவும் விஜய்தான் எனக்கு முக்கியம்’ என ஒரு பெண் பேசினார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

இந்நிலையில், அப்துல் கலாமின் ஆலோசராக பணிபுரிந்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு அறிவார்ந்த தமிழ்நாடு.. படிப்பறிவில் சிறந்து விளங்கும் நாடு.. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் ஒரு தற்குறி கூட்டம் இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்த விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.. இவர்கள் வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம்.. புருஷன் எனக்கு தேவையில்லை விஜய்தான் வேண்டும் என சொல்லும் அளவுக்கு விபச்சார கூட்டம்.. சகோதரியாக இருப்போம். விஜய்க்கு மனைவியாகவும் இருப்போம் என்று சொல்லும் விபச்சாரி ரசிகைகள் கூட்டம்’ என மிகவும் கடுமையாக பேசியிருந்தார்..

இதற்கு தவெகவின் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். மேலும், பொன்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் பொன்ராஜ் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறிவிட்டார்.. விபச்சாரி என்று சொன்னதை திரும்ப பெற மாட்டேன்.. விபச்சாரிகளை விபச்சாரி என்றுதான் சொல்ல முடியும்.. அப்படி சொன்னால்தான் அவர்களுக்கு வலிக்கும்.. எனவே விபச்சாரம் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்’ கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அதெல்லாம் கண்முன்ன வந்து போகும்ல!.. விஜயின் ரோட் ஷோவுக்கு பர்மிசன் இல்லை.. போலீஸ் ஆலோசனை!..