1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. petrol diesel price going high again

3வது முறையாக மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!..

petrol diesel
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் துவங்கிய போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. வளைகுடா நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் வர்த்தகமும் தடைபட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வினியோக சிலிண்டர் தட்டுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக டீ கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 3வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் 91 பைசாவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.105.31 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.98ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்