1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nanjil sampath talk about the issue vijay face

இந்நிலையில் சமீபத்தில் தன்னை இணைத்து கொண்ட நாஞ்சில் சம்பத் தற்போது சில குடைச்சல்கள் கொடுக்கிறார்கள் மண்ணை குடைந்தால் மணி கிடைக்கும் மலையை குடைந்தால் வைரம் கிடைக்கும் விண்ணை குடைந்தால் நிலவு கிடைக்கும் என்னை குறைந்தால் பிரிச்சு கிடைக்கும் தலைவர் விஜயை

tamilaga vetrik kalagam
விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாரோ அப்போது முதலே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். முதலில் அவரை பனையூர் பண்ணையார், பனையூர் அரசியல்வாதி என சொன்னார்கள். களத்திற்கே வராதவர் எப்படி அரசியலுக்கு செட் ஆவார்? என்று சொன்னார்கள்.. எதற்குமே குரல் கொடுக்காதவர், எதிர்த்து பேசாதவர் எப்படி முதல்வராவார் என கேட்டார்கள்..

அவரை சுலபமாக சந்திக்கவே முடியாது.. ஆனால் அவர் எப்படி மக்கள் தலைவராக மாற முடியும்? என கேட்டார்கள்.. ஒருபக்கம் கரூர் சம்பத்திற்கு விஜய்தான் காரணம் என திமுகவினர் அவரை மோசமாக விமர்சித்தார்கள். அவரின் ஜனநாயகன் திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. சிபிஐ 2 நாட்கள் டெல்லிக்கு விஜயை வரவழைத்து கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தது. இப்படி விஜய்க்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் தன்னை தவெகவில் இணைத்து கொண்ட நாஞ்சில் சம்பத் ‘தற்போது சில குடைச்சல்கள் கொடுக்கிறார்கள்.. மண்ணை குடைந்தால் மணி கிடைக்கும்.. மலையை குடைந்தால் வைரம் கிடைக்கும்.. விண்ணை குடைந்தால் நிலவு கிடைக்கும்.. என்னை குடைந்தால் பேச்சு கிடைக்கும்.. தலைவர் விஜயை குடைந்தால் வெற்றி கிடைக்கும்.. நம்புங்கள்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. மொத்தம் 5 தொகுதிகள் காலி.. இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு உண்டா?