1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commision given visil symbol to tvk

இனிமே காது கிழியப்போகுது!.. தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!..

vijay
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அக்கட்சியின் தலைவராக மாறியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார் விஜய்.  மேலும் தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் எனவும் அறிவித்தார். ஆனால் இப்போது வரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க செல்லவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விஜய் தனித்தே போட்டிடுவார் என தெரிகிறது.

இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. சமீபத்தில்தான் தங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒன்றை வழங்க வேண்டும் என தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் விசில், கிரிக்கெட் பேட் உள்ளிட்ட 10 சின்னங்கள் கொடுத்து அதில் ஒன்றை ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் தவெகவுக்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
visil

தமிழக வெற்றிக் கழகம் விசில் சின்னத்தைதான் முதல் முன்னுரிமையக கேட்டிருந்ததாகவும் அதையே தேர்தல் ஆணையம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் கசந்திருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காதல் விவகாரம்!.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்!.. கோவையில் அதிர்ச்சி..