ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. மொத்தம் 5 தொகுதிகள் காலி.. இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு உண்டா?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமாக இருந்த வைத்திலிங்கம் நேற்று திமுகவில் முறைப்படி இணைந்தார்.
தற்போது தமிழக சட்டமன்றத்தில் ஒரத்தநாடு உட்பட மொத்தம் 5 தொகுதிகள் காலியாக உள்ளன. ஏற்கனவே செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததாலும், சில உறுப்பினர்களின் மறைவாலும் இடங்கள் காலியாகின. இருப்பினும், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 2026-டன் முடிவடைய உள்ளது.
இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரவிருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஓராண்டிற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை.
Edited by Siva