1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. no one kept alliance with tvk still now

கூட்டணிக்கு வந்தா ஆட்சி, அதிகாரத்தில் பங்கு!.. விஜய் சொல்லி ஒரு வருஷம் ஆச்சி!...

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்தார். அதை சினிமா உலகில் இருக்கும் பலருமே எதிர்பார்க்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்த போது அந்த மேடையில் ஆவேசமாக பேசிய விஜய் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என அறிவித்தார்.

தமிழகத்தை 50 வருடங்களுக்கு மேல் ஆண்டு வரும் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட இதுவரை அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதில்லை. எனவே அப்படி அறிவித்தால் வழக்கமாக அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தன்னுடைய கட்சிக்கு வரும் என எதிர்பார்த்தார் விஜய்.

ஆனால் அவர் அப்படி அறிவித்தும் இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க செல்லவில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் அப்படி அறிவித்து ஒரு வருடம், 3 மாதங்கள், 26 நாட்கள் முடிந்துவிட்டது. பாஜக, அன்புமணி, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக பக்கம் சென்று விட்டன. தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எனத்தெரிகிறது. திமுக வழக்கம் போல் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் திமுக பக்கம் செல்லும் எனத் தெரிகிறது.

எனவே ஒருபக்கம் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை.. ஒருபக்கம் சிபிஐ விசாரணையிலும் விஜய் சிக்கியிருக்கிறார். அதேநேரம் இதையெல்லாம் தாண்டி விஜய் மீண்டு வருவார் என்கிறார்கள் தவெகவினர். ஆனாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவார் என சொல்வதைவிட தனித்து விடுவார் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.. அரசியலில் விஜய் போட்ட கணக்கு நடக்குமா? இல்லையா? என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
இனி விஜய் வந்தாலும் சேர்க்க வேண்டாம்.. என்.டி.ஏவில் இருக்குற கட்சி போதும்.. அமித்ஷா உறுதி?