கரையை கடக்கும் முரசு புயல் - எங்கெல்லாம் மழை கொட்டப்போகுது?
சென்னைக்கு வடகிழக்கு வங்க கடலில் இன்று காலை 200 கிலோ மீட்டர் தொலைவில் முரசு புயல் மையம் கொண்டிருந்தது. இன்று காலை வங்கக்கடலில் வட மேற்கு திசையில் இந்த புயல் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர தொடங்கியது.
மேலும் சென்னைக்கு வடகிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் இந்த புயல் இன்று அதிகாலை தீவிரப் புயலாக வலுவடைந்து தெற்கு ஆந்திராவை நோக்கி கரையை கடக்கவிருக்கிறது.. சரியாக ஓங்கோல் அருகே இந்த புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. எனவே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.