1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. supreme court rejected kn nehru request

கே.என்.நேருவை கைவிட்ட உச்ச நீதிமன்றம் - அடுத்து அரெஸ்ட் இவர்தானா?

kn nehru
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறையில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக முறைகேடு செய்ததோடு ரூ.634 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் பலமுறை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். கே.என் நேருவின் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கே. என் நேருவின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அமைச்சராக இருந்த கே.என் நேரு தன் மீதான லஞ்ச புகார் வழக்கு விசாரணையை எதிர்கொண்டே ஆக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.

இதையடுத்து விரைவில் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்யப்பட்டு விரைவில் கே.என்.நேரு கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அடுத்து கே.என்.நேருவின் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது திமுகவினர் மற்றும் திமுக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு