1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin asking dmk not to use bad words

அது அவர்களின் உரிமை!. யாரையும் திட்டாதீங்க!.. திமுகவினருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை..

thiruma
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. தவெக தலைவர் விஜயும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறார். அவர் முதன்முதலில் கட்சி துவங்கிய விக்கிரவாண்டி மாநாட்டில் பேசிய போது கூட ‘எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு’ என கூறியிருந்தார்

சொன்னபடியே தற்போது காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு மற்றும் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ ஷாஜகான் ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் பொங்கி வருகிறார்கள்// அதிலும் திமுக எம்பி .ஆராசா போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விசிகவும் எதிர்வினை ஆற்றியது.

இந்நிலையில்தான், தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கங்களில் ‘மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு.

எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என பதிவிட்டிருக்கிறார்.