1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kanimozhi condemn tvk govt on national anthem song

இப்பவும் சைலண்டாதான் இருப்பீங்களா?!.. தவெகவிடம் கேள்வியெழுப்பும் கனிமொழி!..

kanimozhi vijay
திமுக ஆட்சியில் இருந்தபோது ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். குறிப்பாக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது வந்தே மாதரம் பாட வேண்டும் என ஆளுநர் சொல்வார். ஆனால், தமிழக அரசோ தமிழ் தாய் வாழ்த்துதான் பாடுவோம் என சொன்னதால் ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

ஆனால் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போதும், இன்று 23 அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற போதும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. இரண்டாவது ஜன கண மன பாடலும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான ‘நீராரும் கடலுடுத்த’ பாடலும் ஒலிக்கப்பட்டது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தவெக எதில் சிக்கும் என காத்திருந்த திமுகவின் ஆதரவாளர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பலரும் இதை கண்டித்து வருகிறார்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்த தவெக அமைச்சர் ராஜ்மோகன் ‘முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தை பாட சொல்லி நான் ஆளுநர் தரப்பிடம் கேட்டேன். ஆனால், நிகழ்ச்சி நடைபெறுவது ஆளுநர் மாளிகையில்.. எனவே மத்திய அரசு சொல்வதையே நாங்கள் கடைபிடிக்க முடியும் என கூறிவிட்டார்கள்.. எனவே தவிர்க்க முடியவில்லை’ என விளக்கமளித்திருந்தர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக எம்பி கனிமொழி ‘இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாக பாடப்பட்டிருக்கும் செயல் கண்டனத்திற்குரியது.. அவ்வாறு நடக்காது என்று ஏற்கனவே கூறிய தவெக அரசு தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
உலகில் மீண்டும் காட்டாட்சி அபாயாம்!.. ரஷ்யா, சீனா நாடுகள் வார்னிங்!..