1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. viduthalai chiruthaigal katchi x post against dmk

உங்களால நாங்க வளரல!.. உங்களுக்கு ஏன் எரிச்சல்?!.. பொங்கியெழுந்த விசிக!..

thirumavalavan
தமிழகத்தில் தற்போது தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் முதல்வராக மாறியிருக்கிறார். தவெக ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தது.

அதில், காங்கிரஸ் ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. தற்போது விசிக எம்எல்ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதனால் கோபமடைந்த திமுகவினர் விசிகவை சமூகவலைத்தளங்களில் கடுமையாக திட்டி வருகிறார்கள். அதிலும் திமுக எம்.பி ஆ.ராசா போட்ட சர்ச்சையான பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்ல் கீழ்க்கண்டவாறு பதிவிடப்பட்டிருக்கிறது.

விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை!.. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இரத்தமும் சதையுமாய் சிந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்து, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தோள் கொடுத்தது சிறுத்தைகளின் உழைப்பு!

"கட்சித் தாவல்" பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது?.. வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, பிறகு அதே பாஜகவை எதிர்த்த 'சுயநல சாணக்கியத்தனம்' யாருடையது? இது போன்ற பல அரசியல் நாடகங்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது...

கொள்கைக்காகக் கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை. அதற்குள் ஏன் இந்த எரிச்சல்?.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!

விசிக என்னும் பேரியக்கம் எழுச்சித் தமிழரின் உழைப்பால், கோடிக்கணக்கான சிறுத்தைகளின் இரத்தம் மற்றும் வியர்வையால் வளர்க்கப்பட்டது. கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் எந்த நேரத்தில் எந்த அரசியல் உத்தியைக் கையாள வேண்டுமென்று எங்களின் மாண்புமிகு தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்..

எங்களை விமர்சிப்பதற்கு முன், கூட்டணிக் கட்சிகளை வெறும் 'வாக்கு வங்கி' ஏணியாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்ட நினைத்த உங்களின் சுயநலப் புத்தியைப் போய் கேள்வி கேளுங்கள்’ என காட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது.
அனேகமக திமுக கூட்டணியிலிருந்து விசிக விரைவில் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.