17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழா.. அமைச்சர் ரமேஷ் பெருமிதம்...
17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு பெருவிழா குறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவது ஆன்மிகப் பெருமை மட்டுமல்ல; நமது திருக்கோயில் தமிழர் மரபின் தொடர்ச்சியை போற்றும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும், இவ்விழாவை சிறப்பான ஏற்பாடுகளுடன் வெகு விமரிசையாக நடத்துவதற்கு பெரும் துணையாக அமைந்துள்ளது.
மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் அருளால் தமிழ்நாடு மக்கள் அனைவரும் அமைதி, ஆரோக்கியம், வளம் மற்றும் மகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன்.
நமது கோயில்களின் சிறப்பையும் தொன்மையையும் போற்றி, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கொண்டு செல்வோம்.
Edited by Siva

