1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk minister ramesh comment about seeman

சீமான் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்!.. அமைச்சர் ரமேஷ் கோபம்!...

seeman
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தவெக அமைச்சர்களையும், தவெக ஆட்சியையும், தமிழக முதல்வர் ஜோசப் விஜயையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.. அதேபோல் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி டெபாசிட் பெறவில்லை. காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியடைந்தார். ரிசல்ட்டுக்கு பின் வீடியோ வெளியிட்ட சீமான் ‘ நான் ஊர் ஊராக சென்று எவ்வளவோ கத்தியும் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை.. ஆனாலும் நம்பிக்கை இழந்துவிடவில்லை.. தோல்வியை அனுபவமாக ஏற்போம்’ என சீமான் கூறியிருந்தார். ஒரு பக்கம் 8 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி தற்போது நான்கு சதவீதமாக குறைந்துவிட்டது..

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘சட்டசபை சினிமா போல் இருக்கிறது.. அமைச்சர்கள் முதல் தவெக சட்ட மன்ற உறுப்பினர்கள் துதி பாடுகிறார்கள்.. பாட்டு பாடுகிறார்கள்.. என குறியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ‘அவர் முதலில் கவுன்சிலராகும் வழியை தெரிந்து கொள்ளட்டும்.. அதன் பிறகு சட்டமன்றத்தில் பேசும் உறுப்பினர்கள் பற்றி அவர் விமர்சிக்கலாம்’ எனக் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய விஜய் சேதுபதி!. இது எங்க போய் முடியுமோ!...