1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk minister says special bus for dasara

ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்!.. தமிழன் பார்த்திபன் அறிவிப்பு...

govt bus
வருகிற 17, 18ம் தேதி வார இறுதி நாட்கள் மற்றும் 19,20 தேதிகளில் ஆயுத பூஜை என தொடர் விடுமுறைகளில் வருகிறது. எனவே சென்னையிலிருந்து பலரும் தங்களை சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அவர்களில் பலரும் அரசு பேருந்துகளை தேர்வு செய்வார்கள்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ‘தசரா விடுமுறையை ஒட்டி இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும்.. கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மறைமலை நகரில் இருந்து கும்பகோணத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும்’ என அவர் தெரிவித்திருக்கிறார்..

மேலும், 19ம் தேதி ஆயுத பூஜை, 20ம் தேதி விஜய தசமி வருவதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 6190 சிறப்பு பேருந்துகள் எழுப்பப்படும். கிளம்பாக்கத்திலிருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும்’ என அவர் கூறினார்.அதேபோல் நவம்பர் 5 முதல் 7ம் தேதி வரை தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு தமிழக போக்குவரத்து துறை சார்பாக 15,659 பேருந்துகள் இயக்கப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேற தயாராக உள்ளனர்.. செங்கோட்டையன்