1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. indigo flight cancelled because of war

ஈரான் - சவுதி அரேபியா மோதல்!.. இண்டிகோ விமானம் ரத்து!...

indigo
ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பல வருடங்களாகவே மோதல் இருந்து வருகிறது.  அந்த உள்நாட்டு போரில் ஏமன் அரசு படையினருக்கு சவுதி அரேபியாவும். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகிறது.

இதன் காரணமாக ஈரான் - சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே கடந்த பல வருடங்களாகவே மோதல்போக்கு நிலவி வருகிறது. ஓமன் நாட்டில் இருவரும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் சவுதி சர்வதேச விமானநிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பலரும் உயிரிழந்தனர். எனவே, சவுதி விமான நிலையம் தற்போது மூடப்பட்டிருக்கிறது..

ஈரான் - சவுதி அரேபியா இடையே நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக ரியாத், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்த புறப்படும் விமானங்கள் அக்டோபர் 17ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்!.. தமிழன் பார்த்திபன் அறிவிப்பு...