1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. madurai court confirmed nagercoil kasi

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

kasi
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை இணையத்தில் பகிர்வதாக மிரட்டி லட்ச கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற வாலிபர் 2020ம் வருடம் கைது செய்யப்பட்டார்.

அவரது லேப்டாப்பிலிருந்து 1900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை இவர் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் 2023ம் வருடம் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் காசி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை காசிக்கு வாழ்நாள் சிறையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு காசியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை செய்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே