1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk filed case against cm vijay visit to karur

கோர்ட்டில் கேஸ் போட்ட திமுக!.. விஜய் கரூருக்கு போக முடியுமா?.. இன்னைக்கு தெரியும்..

vijay
தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு சென்ற போது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி விட்டனர். விஜய் பிரச்சார வேனின் மீது நின்று பேசிக்கொண்டிருந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு காரணமாக அப்போது விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை. அதே நேரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி செய்தார்.

தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி மலர்ந்திருக்கிறது. ஆனாலும் இப்போது வரை விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இந்நிலையில்தன, வருகிற 10ம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது..

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் முதல்வர் அங்கு சென்றால் அது சிபிஐ விசாரணையை பாதிக்கும்.. ஆதாரங்கள் அழிக்கப்படும் என்பதால் சிபிஐயின் அனுமதி பெற வேண்டும்  அதேபோல் சிபிஐ விசாரணை முடியும் வரை கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல் குமார் போன்றவர்கள் பொது வெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை இன்று நீதிபதிகள் விசாரிக்கவிருக்கிறார்கள்.. அவர்கள் சொல்லும் தீர்ப்பை பொறுத்து முதலமைச்சர் விஜய் கரூருக்கு  செல்வாரா, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை கொடுக்கப்படுமா என்பது தெரியவரும்.
About Writer