தந்தை, 5 வயது சிறுவன் வெட்டிக்கொலை!.. நெல்லையில் அதிர்ச்சி....
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சாதி பிரச்சனை காரணமாக தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. சாதிய வன்மம் மற்றும் பரம்பரை பகையை மனதில் வைத்தும் அங்கே பல கொலைகள் அரங்கேறி வருகிறது. காவல்துறை எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் அங்கே கொலைகள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில்தான், கல்லிடைக்குறிச்சியில் காளிமுத்து என்பவர் தனது 5 வயது மகன் ஜெயராஜ் மற்றும் 15 வயது மகன் சின்னதுரை ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் சென்ற காரை பைக்கில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து காளிமுத்து மற்றும் அவரின் இரு மகன்களையும் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில், காளிமுத்து மற்றும் சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சின்னதுரை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பி சென்றவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.