குட்காவுடன் சிக்கிய தவெக நிர்வாகி!. இரவோடு இரவாக ஜாமீன்!.. சூப்பரு!..
தவெக ஆட்சி அமைந்தவுடன் தமிழக முதல்வர் விஜய் போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏற்படுத்தி தமிழக இளைஞர்களிடம் பரவியுள்ள போதை பழக்கம் தடுக்கப்படும் என கூறப்பட்டது. அதுபோலவே தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகத்தில் பல இடங்களிலும் தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான சோதனையை நடத்தி பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்..
இந்நிலையில்தான், தவெக நிர்வாகி ஒருவரே கடந்த பல வருடங்களாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் வெளியே தெரியவந்திருக்கிறது. சமீபத்தில், ஈரோடு பவானியில் கார்களில் குட்காவை பதுக்கி வைத்திருந்த அருண், ராம்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதில் அருண் அந்த பகுதியில் தவெக நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.
அவர்களிடமிருந்து 8 கிலோ குட்கா, மூன்று கார்கள் மற்றும் பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரம் தவெக நிர்வாகி அருண் இரவோடு இரவாக காவல் நிலையத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 2022ம் வருடம் ஒன்றரை டன் குட்கா கடத்திய கடத்தியதாக அருண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.