1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. kerala girl removed her hair and sharing video

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

kerala girl
பெண்கள் முன்பு போல் இல்லை.. முன்பெல்லாம் பெண்களிடம் இருந்த கூச்சம், தயக்கம், பயம் தற்போது படித்த பெண்களிடம் குறைந்துவிட்டது.. எதையும் மிகவும் தைரியமாக எதிர்கொள்கிறார்கள்.. பேசுகிறார்கள்.. குறிப்பாக சமூக வலைதளங்களிலும் அவர்கள் எதையும் தைரியமாக பேசும் சூழ்நிலையை உருவாகியிருக்கிறது.

ஒருபக்கம் சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் டிரெண்டிங் ஆகிவருகிறது. இந்நிலையில்தான் கேரளாவை சேர்ந்த கீர்த்தனா என்கிற இளம்பெண் தனது அழகான தலைமுடியை திடீரென மொட்டை எடுத்து ‘வீட்டில் திருமணத்திற்கு திட்டம் போட்டார்கள்.. அதனால் மொட்டை அடித்து விட்டேன்’ என பதிவிட்டிருந்தார். இது நெட்டிசன்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிலர் அவரின் தைரியத்தை பாராட்டினாலும் பலரும் இப்படி செய்வது தவறு என்கிற ரீதியில் கமென்ட் போட தான் சொன்ன காரணம் பொய் என மறுத்திருக்கிறார் கீர்த்தனா.. இயல்பாக கோவிலில் முடி காணிக்கை செய்ததாகவும் கல்யாண வயதில் மொட்டை போடுவதால் அப்படி ஒரு கேப்ஷன் போட்டதாகவும் விளக்கமளித்திருக்கிறார். இவரின் பதிவில் பல இளம் பெண்கள் ‘இந்த தைரியம் எனக்கும் வர வேண்டும்’ என பதிவிட்டு வருகிறார்கள்..


அடுத்த கட்டுரையில்
விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..