1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. latha rajinikanth no comments about vijay govt

விஜய் பத்தி கேட்டா ‘நோ கமெண்ட்ஸ்’.. தவெகவினரை கோபப்படுத்திய லதா ரஜினிகாந்த்..

latha rajinikanth
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறி இருக்கிறார் விஜய். ஒருபக்க்ம், அரசியலுக்கு வருவதாக 25 வருடங்கள் தன ரசிகர்களை எதிர்பார்க்க வைத்த ரஜினி ஒரு கட்டத்தில் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் வரும் எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.

மேலும், தேர்தல் ரிசல்ட் வெளியான போது திமுக தலைவர் முக ஸ்டாலினை ரஜினி சந்தித்ததால் திமுகவின் ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க மறைமுகமாக ரஜினி ஐடியா கொடுத்தார் என விஜய் ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், அதை மறுத்த ரஜினிகாந்த் நான்  ‘அப்படிப்பட்ட கீழ்த்தரமான நபர் நான் இல்லை’ என்று கூறியிருந்தார். மேலும் ‘நான் அரசியலுக்கு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருப்பேன்’ என்றெல்லாம் கூறினார்

ஆனால், விஜயின் வளர்ச்சி மீது ரஜினிக்கு பொறாமை.. ரஜினி வரவில்லை. ஆனால், விஜய் வந்து முதலமைச்சராகவும் மாறிவிட்டார். விஜய் முதல்வரானதை ரஜினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு நிறைய காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான், ரஜினியின் மனைவி லதா ‘மக்கள் மேடை’ என்கிற ஒரு புதிய அரசியல் இயக்கத்தை துவங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரிடம் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே பேட்டி எடுத்தார். அப்போது ‘விஜயோட ஒரு மாத ஆட்சி எப்படி இருக்கிறது?’ என பாண்டே கேட்டார். அதற்கு ‘அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பல. இப்ப இருக்க சூழ்நிலையில் நான் சாரோட(ரஜினி) இருக்கேன்.. நான் என்ன சொன்னாலும் அதை நீங்க சென்சேஷன் பண்ணுவீங்க’ என்று கூறினார்.

‘நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அப்படியே கட் பண்ணாம போடறோம். ஒரு எழுத்து கூட கட் பண்ணாம அப்படியே வரும்’ என்று ரங்கராஜ் பாண்டே சொல்லியும் ராதா ரஜினிகாந்த் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்லிவிட்டார். இதை சமூகவலைத்தளங்களில் பகிரும் விஜயின் ரசிகர்கள் ரஜினியிம்  குடும்பத்திற்கு விஜய் மீது எவ்வளவு வன்மம் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
மின்வெட்டு விவகாரம்: தவெக அரசை சாடி முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை!