1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dindigul leoni comment against cm vijay

இத மட்டும் விஜய் செஞ்சிட்டா சேகர்பாபு 10 லட்சம் கொடுப்பார்!.. திண்டுக்கல் லியோனி நக்கல்!..

sekar babu
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக மாறிய நிலையில் 2026 தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது.

அதிலும் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போனது திமுக ஆதரவாகளிடமும் திமுகவினரிடமும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது

இந்நிலையில், நேற்று திமுக கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ லியோனி ‘தவெகவில் எல்லாம் புதியவர்களாக இருக்கிறார்கள்.. யார் எம்.எல்.ஏ? யார் அமைச்சர்? என்று யாருக்கும் தெரியவில்லை. முதலமைச்சருக்கே யாரெல்லாம் அமைச்சர் என தெரியாது.. விஜய்க்கே அமைச்சர்களின் பெயர் என்னவென தெரியவில்லை..  உங்களுடைய அமைச்சர்கள் பெயரை நீங்கள் வரிசையாக சொன்னால் எங்கள் அண்ணன் சேகர் பாபு உங்களுக்கு 10 லட்சம் கொடுப்பார்’ என கலாய்த்து பேசியிருக்கிறார்.