1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Power Cut Issue: Former Electricity Minister Senthil Balaji Slams TVK Government Over Long Power Outages

மின்வெட்டு விவகாரம்: தவெக அரசை சாடி முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை!

senthil balaji
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு பிரச்சினை குறித்து, மின்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தற்போதைய தவெக அரசை வன்மையாக கண்டித்து அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அவரது அறிக்கையின்படி, புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது ஒரு மாத கால ஆட்சியில், தங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே பரிசாக தந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கும் கொடூரமான மின்வெட்டு காரணமாக, தாங்க முடியாத துயரத்தில் மக்கள் நள்ளிரவிலும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்து போராடி கொண்டிருக்கிறார்கள்.
 
அரசாங்கம் என்பது சமூக வலைதளங்களில் "இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும்" வேலையை மட்டும் செய்யாமல், களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று அவர் சாடியுள்ளார். 
 
நள்ளிரவில் மின்சாரமின்றி போராடும் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க, இந்த மின்வெட்டு பிரச்சினைக்கு எதிராக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இந்த மின்வெட்டு விவகாரம் மற்றும் முன்னாள் அமைச்சரின் அறிக்கை தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய் பத்தி கேட்டா ‘நோ கமெண்ட்ஸ்’.. தவெகவினரை கோபப்படுத்திய லதா ரஜினிகாந்த்..