1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay planning to celebrate his birthday

பெரம்பூர் தொகுதி மக்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் விஜய்!.. பரபர அப்டேட்..

vijay
நடிகராக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள முதல்வர் விஜய் இரண்டு வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். இந்நிலையில்தான், வருகிற ஜூன் 22ம் தேதி முதல்வர் விஜய் தனது 52வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

விஜய் தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். எனவே வியாசர்பாடி பகுதியில் அவருக்கு எம்எல்ஏ அலுவலகம் தயாராகி வருகிறது, பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அதை திறந்து வைக்கும் முதல்வர் விஜய் அங்கேயே தொகுதி மக்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் மாதத்தில் ஒருநாள் தொகுதிக்கு சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை நேரிடையாக பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளாராம். தேவைப்பட்டால் பெரம்பூர் தொகுதி கட்சி அலுவலகத்திலேயே தங்கவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
திமுக மகளிர் கூட்டம்!.. வரவேற்க ஆளில்லை.. திரும்பிச்சென்ற துரை முருகன்!..