1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. america spent three lakh crores for war

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

donald
அமெரிக்காவில் ஒவ்வொரு முறையும் புதிய அதிபர் பதவி ஏற்கும் போது அவர்கள் ஏதோ ஒரு நாட்டின் மீது போரை துவங்குவார்கள். ஒன்றும் இல்லாத காரணத்தை காட்டி கூட அவர்கள் போரை நடத்துவார்கள். அதில் பல லட்சம் கோடியையும் அவர்கள் செலவு செய்வார்கள்.
இதை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது இரண்டாவது முறை டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.அவர் ஆட்சிக்கு வந்தபின் ஈரான் நாட்டுடன் அவர் போரை துவங்கியிருக்கிறார்.அந்த நாடு அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போர் நடைபெற்று வருகிறது..

சில நாட்களுக்கு முன் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டார்கள். ஆனாலும், ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்த தாக்குவதால் கோபமடைந்த அமெரிக்கா ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை 35 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.6 லட்சம் கோடி) செலவாகியிருப்பதாக அமெரிக்கா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கடந்த மே மாதம் கணக்கிடப்பட்டதை விட போரின் செலவு கூடுதலாக 8 மில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...