1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. av velu said dmk woudl have filed fir against vijay

கரூர் சம்பவத்தில் விஜய் மீது FIR போடாமல் தடுத்தார் ஸ்டாலின்!.. ஏ.வ.வேலு பேச்சு!..

vijay stalin
தற்போதைய முதல்வர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்ப்பதற்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிவிட்டனர். மதியம் 2 அல்லது 3 மணிக்கு விஜய் வருவார் என சொல்லப்பட்ட நிலையில் அவரோ இரவு 7 மணிக்குதான் அந்த பகுதிக்கு சென்றார்.

அவர் பிரச்சார வேனின் மீது நின்று பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்தனர். மக்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது விஜய் அங்கிருந்து கிளம்பி விமான மூலம் சென்னை வந்துவிட்டார்.
அது ஒரு விபத்து என்றாலும் அதற்கு பின்னணியில் திமுகவின் அரசியல் சாதி இருப்பதாக விஜய் நம்பினார்.

அதனால்தான் அப்போதைய முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவையும் வெளியிட்டார். மேலும் கரூர் சம்பவத்தில் என்னை பலிகாடாக்க முயற்சி செய்கிறார்கள் என்று மேடைகளில் பகீரங்கமாக குற்றம் சுமத்தினார். இப்போது வரை கூட ‘அந்த சம்பவத்திற்கு நானும் முக்கிய காரணம்.. அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று விஜய் எங்கேயும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தற்போது தவெக ஆட்சி மலர்ந்து விஜய் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார்..

இந்நிலையில், கலைஞர் பிறந்த நாள் விழாவில் பேசிய முன்னாள் திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு ‘ கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போது FIR போட வேண்டும் என எல்லா அதிகாரிகளும் சொன்னார்கள். ஆனால் எங்கள் தலைவர் முக ஸ்டாலின் ‘எந்த கட்சி தலைவராவது தன் தொண்டன் சாக வேண்டும் என ஆசைப்படுவாரா?’ என்று சொல்லி FIR போடுவதை தடுத்தார். அப்படிப்பட்ட தாயுள்ளம் கொண்டவர்தான் எங்கள் தலைவர். ஆனால், விஜயோ திமுகவை விமர்சனம் செய்து பேசி வருகிறார். அன்று மட்டும் FIR போட்டிருந்தால் இன்னைக்கு நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும்’ என்று அவர் பேசியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
இரண்டு குழந்தைகளும் எங்கள் குழந்தை இல்லை.. தம்பதியின் வழக்கால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம்..