1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin talk against chief minister vijay

பாஜகவின் ஜெராக்ஸ்தான் தவெக!.. விஜய்க்கு என்ன பயம்?.. முக ஸ்டாலின் கேள்வி!..

stalin vijay
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் முக ஸ்டாலின் இருந்தார். ஆனால் மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டனர்.

அதோடு திமுகவின் கூட்டணி கட்சிகளிடமே ஆதரவை பெற்று தமிழக முதல்வர் விஜய் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறார். ஒரு பக்கம் தவெக அரசை திமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் நடந்த மகளிர் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ‘நான் முதலமைச்சராக இருக்கும் போது டெல்லி போனபோது அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தப்பிக்க போனாரு என்று விஜய் சொன்னார்.  இப்போது அவர் ஏன் டெல்லி போனார்? கரூர் வழக்கிலிருந்து தப்பிக்கவா?..

அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். அதாவது மற்ற மாநிலங்களில் பாஜக செய்வதையே அவரும் செய்கிறார். பாஜகவின் ஜெராக்ஸாக தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. வார்த்தைக்கு வார்த்தை கான்ஃபிடண்டாக இருங்க என்று சொன்ன விஜய்க்கு தற்போது கான்ஃபிடன்ட் இல்லையா?.. ஏன் அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்களை தன் கட்சிக்கு இழுக்கிறார்?.

அவருக்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா?.. இது சினிமா அல்ல. ஆட்சி நிர்வாகம். எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சி கவிழும். தவெக ஆட்சி பாதுகாப்பு அளிக்கும் என பிரச்சாரத்தின் போது பேசினார்கள். ஆனால் இப்போது தவெகவிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்திருக்கிறது’ என்று மு.க ஸ்டாலின் பேசினார்..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
இனிமே பேசினா சட்டசபையிலேயே பதிலடி!.. விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!..