1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kovai selvaraj quit from admk

அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!

kovai selvaraj
அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து இருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியில் கடந்த சில மாதங்களாக இருந்தவர் கோவை செல்வராஜ் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இருந்து விலக மாட்டேன் என்றும் விரைவில் நல்ல முடிவை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
திராவிட பாரம்பரியத்தில் தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருமே என் அம்மாவின் உயிரை காப்பாற்ற தவறிய துரோகிகள் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் அடுத்த கட்டமாக எந்த கட்சியில் இணைவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்வு!