1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Onam Special Train Announced Between Sarapalli and Kottayam Via Salem

ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகம் வழியாக சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

ஓணம் சிறப்பு ரயில்
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக. 26-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
 
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் சாராலப்பள்ளியிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சாராலப்பள்ளியிலிருந்து ஆக. 16-ம் தேதிமுதல் 30-ம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படும். 
 
இந்த ரயில் நல்கொண்டா, குண்டூர், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக கோட்டையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், கோட்டையம் - சாராலப்பள்ளி சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதிமுதல் வரும் 31-ம் தேதிவரை இயக்கப்படும்.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி.. கடைசி நாளான இன்று வெளியான ட்விஸ்ட்..