1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified சனி, 3 டிசம்பர் 2022 (17:37 IST)

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்வு!

gujarat election
குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த 1ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது என்பதும் இதில் 64 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது
 
சற்றுமுன் குஜராத் சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளுக்கு வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran