தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி செய்துள்ளது தமிழக உள்துறை- பாஜக குற்றச்சாட்டு
- திமுகவின் ஊதுகுழலாக ஓபிஎஸ் செயல்படுகிறார்- ஜெயக்குமார் விமர்சனம்
- தமிழக சாலைகளை செம்மைப்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
- தமிழகத்தில் திறமையற்ற பொம்மை அரசு: ஆளுனரை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி
- தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது – எடப்பாடி பழனிசாமி
பொது இடத்தில் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!
கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியின் 18 மாத சாதனைகள் குறித்தும் பொது இடத்தில் விவாதிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயாரா என சவால் விடுத்துள்ளார்
இந்த சவாலை ஏற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்வாரா?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக இறங்கி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
