வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (16:44 IST)

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்: டிடிவி தினகரன் கருத்து

ttv dinakaran
அதிமுக தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். 
 
அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிந்து உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார் 
 
மேலும் திமுகவை சேர்ந்தவர்கள் தான் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
 இரட்டை இலை சின்னம் தற்போது கிட்டத்தட்ட முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சின்னம் யாருக்கு சேரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran