ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2022 (13:05 IST)

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

Edappadi
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக நடத்தி வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் பேசியபோது 18 மாத திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றும் சொத்து கட்டண உயர்வு மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு செல்லவில்லை என்றும் ஆனால் தற்போது தமிழகம் மிகப்பெரிய மோசமான இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
எங்களது ஆட்சியை பார்த்து எதிர்க்கட்சிகள் வயிறு எரிகிறது என முதலமைச்சர் சொன்னார். ஆனால் உண்மையில் மக்களின் வயிறு தான் எரிகிறது என அவர் ஆவேசமாக பேசினார் 
 
பொய் வழக்கால்  அதிமுகவை முடக்க முடியாது என்றும் அதிமுக வளர்ச்சியை ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran