முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..
தமிழக வெற்றி கழகம் சார்பில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனை சந்தித்து கிராமத்து பெண்கள் தங்கள் நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
முன்னெல்லாம் தொலைக்காட்சிகளில் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், தற்போது நடப்பு அரசியல் நிகழ்வுகளையும் செய்தி சேனல்களையும் அதிகம் கவனிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தற்போதைய ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் கிடைப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக அப்பகுதி பெண்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
சந்திப்பின்போது பேசிய பெண்கள், "எங்களுக்கு எந்தவித லஞ்சமும் இன்றி நியாயமான முறையில் உதவிகள் கிடைத்து வருகின்றன. இதற்காக எங்கள் முதலமைச்சருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துவிடுங்கள்" என்று த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திகேயனிடம் மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் கூறியுள்ளனர்.
மக்களின் இந்த எளிய பாராட்டும் நற்சான்றிதழும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்களின் தேவைகளை நேரடியாக கேட்டு அறிந்து, அதற்கு தகுந்த தீர்வுகளை வழங்கும் மக்கள் பிரதிநிதிகளின் இத்தகைய எளிய செயல்பாடுகள் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதே தற்போதைய அரசியல் சூழலின் முக்கிய தேவையாக உள்ளது என்பதை இப்பெண்களின் கருத்துக்கள் ஆழமாக உணர்த்துகின்றன.
Edited by Siva
