சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி.. கடைசி நாளான இன்று வெளியான ட்விஸ்ட்..
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.
போலி எரிவாயு இணைப்புகளை கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலி மூலமாகவும், கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிக்கு காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக அந்த அவகாசம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுள்ள இந்த நாளுக்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளாவிட்டால், சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியாத சூழல் உருவாகும் என்பதால் நுகர்வோர் உடனடியாக இதை செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva
