1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai highcourt order about sp velumani case

எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

velumani
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த தீர்ப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறிய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்